“முதலமைச்சர் ஜோசப் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை” – வைகோ பேட்டி!

அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும்போது வேண்டாம் என விஜய் சொல்வாரா? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொது பேசியவர், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான நிர்வாக குழு கூட்டம் இன்று ஒன்பது மணி அளவில் தொடங்கி விட்டதால் எங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றம் செல்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதிக பெரும்பான்மையை முதலமைச்சர் விஜய் அவர்கள் நிரூபித்து விட்டார்.

ஆகவே ஆளுநர் விடுத்த மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் ஆளுநர் மாளிகை அல்ல சட்டமன்றம் தான். திமுக தலைவர் ஸ்டாலின் கூறியவாறு, ஆறு மாத காலம் இந்த அரசுக்கு அவகாசம் கொடுப்போம். அதுவரை நாம் பொறுமையை கடைப்பிடிப்போம் என்று கூறியிருக்கிறார்.

எங்களது நிலைப்பாடும் அதுவே தான். விஜய் சிறந்த நிர்வாகத்தை தருவோம் என்று முதல் பேச்சில் நிரூபித்திருக்கிறார். நாங்களும் ஆறு மாத காலம் அமைதியையும் பொறுமையும் கடைபிடிக்க வேண்டும். இந்த அரசு எடுக்கும் நல்ல முயற்சிகள் நல்ல திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் மதிமுகவின் சார்பில் உங்கள் விருப்பத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1967இல் அண்ணா முதலமைச்சர் ஆன போது முன்னாள் முதலமைச்சர்களின் வீட்டிற்கு சென்று பார்த்தது போல தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களும் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்திற்கு சென்றதோடு, பல்வேறு கட்சி தலைவர் அவர்களின் எண்ணங்களுக்கும் அலுவலகத்திற்கும் சென்று நல்ல முன்மாதிரியை, ஆரோக்கியமான அரசியல் நிலைப்பதற்கு அவர் மேற்கொண்டுள்ள இந்த அணுகு முறையை பாராட்டுகிறேன். இன்று நடைபெற்ற நிர்வாக குழுவில் நாங்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களில் முதல் ஒன்று.

மதச்சார்பின் மேல் சமூக நீதி, ஜனநாயகம், கூட்டாட்சி கொள்கை, போதை கலாச்சார ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, இவற்றை பாதுகாத்து இந்த நெறிகளில் இருந்து, முதலமைச்சர் விஜய் ஆட்சி நடத்த வேண்டும் என்று வேண்டுகோளை முன் வைக்கிறோம்.

கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி தீர்மானிக்கும் போது, தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக இருப்பது சீமை கருவேல மரங்கள் தான். உள்ளாறு அணைக்கட்டு திட்டத்தை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டு பன்றிகளை அகற்ற வேண்டும்.

காமராஜர் ஆட்சி காலத்தில் கேரளா, தமிழ்நாடு எல்லையில் உள்ள செண்பகவல்லி தடுப்பணை 20000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வந்தது. தற்போது அது பழுதாகி தடைபட்டுள்ளது. அந்த அணையை கட்டுவதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும், அதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.


இதை செய்வதற்கு கேரளா அரசு முன்வர வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வாசுதேவ நல்லூரில் ஐந்தாம் தேதி ஒன்னாம் நிலை அறப்போர் நடத்துவதாக முன்னெடுத்துள்ளோம். ஜோசியரை அரசு ஆலோசகராக நியமித்து திரும்ப பெற்றதை வரவேற்கிறேன். நான் இன்னும் திமுக கூட்டணியில் தான் தொடர்கிறேன். இந்த தோழமை தொடரும். உதயநிதி துணை முதல்வராக இருந்து தற்போது திமுகவின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அதிமுகவில் இரண்டாக பிளவா என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும். திராவிட கட்சி வரக்கூடாது என்று விஜய் எந்த மேடையிலும் கூறவில்லை, அவர் வெற்றி பெற வேண்டும் என்று தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.