பெரியார் பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக சோதனை… சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாநகர காவல்துறையினரின் சார்பில் 7 இடங்களில் தொடர்ந்து 17 மணி நேரமாக சோதனை நடைபெற்ற நிலையில்  முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனங்களைத்…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாநகர காவல்துறையினரின் சார்பில் 7 இடங்களில் தொடர்ந்து 17 மணி நேரமாக சோதனை நடைபெற்ற நிலையில்  முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனங்களைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மோசடி , போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பெரியார்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் டிச.26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜெகநாதனை நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய போது அவர் தரப்பு வழக்குரைஞர்கள் உடல் நிலை, வயது ஆகியவைகளை காரணம் காட்டி கடுமையாக வாதம் செய்தனர்.  தொடர்ந்து அவருக்கு சூரமங்கலம் காவல் நிலையத்தில் 7 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:   “விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இந்த நிலையில்,  காவல் துறை சார்பில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் குடியிருப்பு,  அலுவலகம்,  விருந்தினர் விடுதி,  பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.  நேற்று (டிச.27) மாலை முதல் தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்ற நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக சோதனை நடைபெற்றது.

தொடர்ந்து, 17 மணி நேரத்தை கடந்து சோதனை நடைபெற்ற சூழலில் பதிவாளர் அலுவலகம்,  துணைவேந்தர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய ஆவணங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக போலீசார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.