வருமானம் இழந்தாலும் பாலஸ்தீன மக்கள் பக்கம் நிற்கும் மியா கலிஃபா!

வருமானம் இழக்க நேரிட்டாலும் பாலஸ்தீன மக்கள் பக்கமே நிற்பேன் என மியா கலிஃபா தெரிவித்துள்ளார்.  லெபனானில் பிறந்து வளர்ந்த மியா கலிஃபா 2001 முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பாலியல் நடிகையாக குறுகிய காலங்களில்…

வருமானம் இழக்க நேரிட்டாலும் பாலஸ்தீன மக்கள் பக்கமே நிற்பேன் என மியா கலிஃபா தெரிவித்துள்ளார். 

லெபனானில் பிறந்து வளர்ந்த மியா கலிஃபா 2001 முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பாலியல் நடிகையாக குறுகிய காலங்களில் மிகவும் புகழ்பெற்ற இவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழுவினர் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்ததால் உலக அளவில் புகழ் பெற்றார் மியா. தற்போது பாலியல் நடிப்பினை கைவிட்டு சமூக வலைதளப் பிரபலமாகவும் வெப் கேம் மாடலாகவும் மற்றும் விளையாட்டு வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி காஸா. காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தன்னாட்சி செய்து வருகின்றனர். இஸ்ரேல் இந்த அமைப்பை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. தற்போது ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலால் இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகை மியா கலிஃபா பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ‘ப்ளே பாய்’ எனும் பாட்காஸ்ட் மியாவுடனான தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் கனடா புராட்கேஸ்டர் டாட் செபிரோ மியாவுடனான தனது ஒப்பந்தத்தையும் முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

https://twitter.com/ArmandDoma/status/1711563643379466346?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1711563643379466346%7Ctwgr%5E797aeacad792017524a030dcfb500c5c322624da%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2023%2Foct%2F10%2Fmia-khalifa-lost-income-for-supporting-hamas-4086688.html

இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்கு ஆதரவளித்த மியாவுக்கு சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு மியா கலிஃபா, “பாலஸ்தீன மக்களின் சூழ்நிலையை பார்த்தும் அவர்கள் பக்கம் நிற்கவில்லை என்றால் நீங்கள்தான் தவறான பக்கத்தில் நிற்கிறீர்கள் என அர்த்தம். வரலாறு இதை உங்களுக்கு உணர்த்தும் காலம் விரைவில் வரும்” எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.