அக்.13ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம்…!

நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் அக்.13ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில்,…

நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் அக்.13ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வருகிற அக்.13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.