எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 கோடி 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 5 புதிய கட்டிடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தனர். அதன்ன்பின்னர் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் குறித்து அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு மகப்பேறு
பெண்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது..
“தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஆய்வககங்கள் மருத்துவ கட்டமைப்புக்காக 12 கட்டிடங்கள் 4 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் பேண்ட் பகுதியில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 35 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகராட்சிக்கு 32 கட்டிடமும் ஆத்தூர் நகராட்சி, எடப்பாடி , மேட்டூர் நகராட்சி ஆகிய பகுதிகளுக்கு தலா ஒரு கட்டிடமும் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 26 கட்டிடங்கள் கட்டுமான பணி முடிவடையும் நிலையில் உள்ளது. பிப்ரவரி
மாதம் மேற்படி கட்டிடங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 22 துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அதற்கும் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்காக 7 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. தாதம்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மக்களை தேடி மருத்துவத்தை குற்றம் சாட்டுவது சம்பந்தமான செய்தியாளர்கள் கேள்விக்கு, தெரிவதை தெரியாதது போல் பேசுவதும், தூங்காமல் தூங்குவதைப் போல் நடிப்பதும் ஒன்றுதான் பழனிச்சாமி அதைத்தான் செய்து வருகிறார்.. மக்களைத் தேடி மருத்துவம் அகில உலக அளவில் பாராட்டைப் பெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழக முதல்வர்என்ற முறையில் திட்டத்தை தொடங்குவதோடு மட்டுமல்லாமல் , அந்தத் திட்டத்தை 50 லட்சம் ஆவது பயனாளி 60 லட்சம் ஆவது பயனாளி 70 லட்சம் ஆவது பயனாளி 80 லட்சம் ஆவது பயனாளி என்று தொடர்ந்து கண்காணித்து திட்டத்தை செயல்படுத்து வருகிறார். இந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவு 681 கோடி. இப்போது 407 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் பத்திரிக்கை வாயிலாக தெரிவித்து விட்டோம் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை.” என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.