முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார்’- சரத்குமார் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் இருந்து படியே காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் பேசியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்ல. கட்சியின் எதிர்க்கால திட்டம் குறித்து இன்று நிர்வாகிகள் உடன் ஆலோசிக்கப்படவுள்ளது. இன்று மாலைக்குள் ஈரோடு கிழக்கு தொகுதி நிலைபாடு குறித்து அறிவிக்கப்படும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொங்கு மண்டலத்தில் சமத்துவ மக்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு உள்ளது, கடந்த தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்குகளில் எங்களின் பங்கீடும் உள்ளது.

இந்த ஈரோடு இடைத்தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் போட்டியிட விருப்பபட்டால் போட்டியிட தயார். நானும் பிரச்சாரம் செய்ய தயாராக உள்ளேன். தனித்து தேர்தலில் நிற்க வேண்டும் என்பதுதான் என் நிலைபாடு.ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணியில் இணைந்தோம்.. எதிர்வரும் காலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா இல்லை என்பதை ஆராய்ந்து தான் முடிவு எடுக்கப்படும்.

மிகப்பெரிய இயக்கமான அதிமுக பிரிந்தாலே பலவீனம் அடைந்ததாகதான் அர்த்தம். இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலா என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதிமுக பலவீனம் அடைந்துள்ளது. அதனால்தான் அதற்கு பின்னால் உள்ள கட்சிகள் வளர்ந்து வருகின்றன.

ஈரோடு இடைத்தேர்தலால் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படாது. உதயநிதி ஸ்டாலின் படங்களை வாங்கி வெளியிடுவது கலைத்துறைக்கு நல்லதுதான். ஒரு காலத்தில் படங்களை வாங்கவே ஆள் இல்லாத நிலை இருந்தது, இன்று ஒருவர் வாங்கி வெளியிடுவது நல்லதுதான் .

இனி வரும் காலங்களில் மக்கள் நலனை முன் வைத்தே சமத்துவ மக்கள் கட்சியின் அரசியல் பயணம் இருக்கும். கடந்த 16 வருடமாக சமத்துவ மக்கள் கட்சி நல்ல நிலைக்கு வரவில்லை அதற்கு நான்தான் காரணம். தலைவன் சரியாக இருந்தால் தான் கட்சி சரியாக இருக்கும். இவ்வாறு சரத்குமார் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் இதுவரை 97% நகைக்கடன் தள்ளுபடி

Arivazhagan Chinnasamy

ஊரடங்கால் குறைந்த மின்சார பயன்பாடு!

கட்டுமர பயணம் செய்யும் சென்னை வாசிகள் ; ஆபத்தான அன்றாட பயணம்

EZHILARASAN D