முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறது- ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாரமால் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்: இந்திய அணி பயிற்சியாளர்; ஹர்பஜன் ஆலோசனை

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது அமைதியான முறையில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி நடந்து வருகிறது. மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் உள்ள நகராட்சி பள்ளியில் தனது வாக்கினை திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், எனது வாக்கினை வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு செலுத்தியுள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள், மதச்சார்பாற்ற கூட்டணிக்கு தான் வாக்களிப்பார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 20 மாத ஆட்சிக்கும், ராகுல் காந்தியின் தியாக நடைபயணத்திற்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவும் இந்த தேர்தல் முடிவு இருக்கும். இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எதிர் அணியினர் இதுவரை சந்திக்காத தோல்வியை இந்த தேர்தலில் அடைவார்கள். ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாரமால் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றார்.மைதொடர்பான அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், எனது விரலில் மை வைத்து 10 நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்னும் மை அப்படியே தான் இருக்கிறது. மை தொடர்பாக ஏற்கனகே காமராஜரிடம் அப்போது கேட்ட போது, மையாவது, மண்ணாங்கட்டியாவது மக்கள் முடிவு செய்கிறார்கள் என்று சொன்னார். அதேபோல் வாதம் தான் இப்போது பொருள்படும். எதிர்கட்சி ஜெயிக்க முடியாது என்ற காரணத்தால் தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவார் ஸ்டாலின்”: அப்பாவு உறுதி

G SaravanaKumar

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை : கனிமொழி

Niruban Chakkaaravarthi

நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி; நெசவாளர்கள் கண்ணீர்

Halley Karthik