இந்திய அணி பயிற்சியாளர்; ஹர்பஜன் ஆலோசனை

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் போட்டி, டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சியாளர்களை நியமிப்பது குறித்து அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்…

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் போட்டி, டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சியாளர்களை நியமிப்பது குறித்து அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வீரேந்திர சேவாக் அல்லது ஆஷிஷ் நெஹராவை நியமிக்க வேண்டும். ஏனெனில் இந்திய அணிக்கு டி20 போட்டியின் சூட்சமங்களை புரிந்து கொண்ட ஒரு பயிற்சியாளர் தேவை. இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் இருக்கம் போது இரண்டு பயிற்சியாளர்கள் ஏன் இருக்கக்கூடாது என்று கேள்வியெழுப்பினார்.

இதையும் படிக்கவும்: பார்வையாளர்கள் வருகையில் புதிய சாதனை படைத்த நியூ லேண்ட் மைதானம்!

தொடர்ந்து பேசிய அவர், ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை வழிநடத்திய பயிற்சியாளர் முதல் போட்டியிலேயே குஜராத் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வழிவகுத்தார். அந்த ஒற்றுமை டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு தேவை. அது இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிகளை பற்றி நன்கு தெரிந்த ஆஷிஷ் நெஹரா இந்திய அணியை வழிநடத்துவது சரியாக இருக்கும். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ராகுல் டிராவிட் வழிநடத்தினால் இந்திய அணி முதலிடத்தில் இருக்கும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.