ஸ்டீராய்டு ஊசி அதிகம் எடுத்துக் கொண்ட ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு – மருத்துவர்கள் கூறுவது என்ன..?

ஆவடி அருகே ஆணழகன் பட்டம் வென்ற ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகளவில் ஸ்டீராய்டு பயன்படுத்தியதால் அவரது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அடுத்த…

ஆவடி அருகே ஆணழகன் பட்டம் வென்ற ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகளவில் ஸ்டீராய்டு பயன்படுத்தியதால் அவரது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்த சபரிமுத்து என்கிற ஆகாஷ் என்பவர் நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்றுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர், மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், மாநில அளவிலான போட்டியில் பட்டம் பெறுவதற்காக கடுமையாக பயிற்சி செய்து வந்துள்ளார்.

கடந்த 22ஆம் தேதி திடீரென ரத்த வாந்தி எடுத்த அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சபரிமுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதிக அளவில் ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் அவருடைய 2 கிட்னியும் செயலிழந்ததால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற சபரிமுத்து கடுமையாக உடற்பயிற்சி செய்ததுடன் கட்டுடல் கொண்டு வர ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு கிட்னியும் செயல் இழந்து ஆகாஷ் உயிர் இழந்து இருப்பதாக கூறப்படுகிறது.  உடற்பயிற்சி கூட பயிற்றுனரின் உயிரிழப்பு பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டீராய்டு ஊசி அதிகம் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இருதயவியல் நிபுணர் மருத்துவர் தீப்சந்த் ராஜா நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியை காண..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.