மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குப்பைகளை அள்ளும் வாகனத்தில் உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகளை கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாக்குகார தெருவில் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஏழை,எளிய மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இங்கு மக்களுக்கு வழங்கப்பட்டும் மருந்துகளை குப்பைகளை அள்ளும் வாகனத்தில் கொண்டு வந்து இறக்கி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வேதனை அடைந்துள்ள மக்கள் பண செலவழிக்க வழியில்லாமல் தான் அரசு மருத்துவமனையை நாடி வருகிறோம்.இங்கு இப்படி நிகழ்ந்தால் நாங்கள் எங்கு செல்வது என தெரிவிக்கன்றனர்.
உலகம் இப்போது தான் கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல மீண்டுள்ளது.அதற்குள் இதுப்போன்ற சம்பங்கள் நிகழ்வது நோய்தாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கன்றனர்.கர்ப்பிணிகள்,குழந்தைகள் அதிகளவில் சிகிச்சை பெறும் இங்கு இதுபோன்று நிகழ்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
—-வேந்தன்







