’மக்களால் புறக்கணிப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி’ – அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்

கட்சியில் அங்கீகாரம் கிடைப்பது, சின்னம் கிடைப்பதெல்லாம் பெரிதல்ல, மக்களின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வரானவர் அல்ல என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில்…

கட்சியில் அங்கீகாரம் கிடைப்பது, சின்னம் கிடைப்பதெல்லாம் பெரிதல்ல, மக்களின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வரானவர் அல்ல என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்தவர்களுக்கு, ஈரோடு கிழக்கு தொகுதி பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் கிடையாது. எதிர்க்கட்சிகளின் பரப்புரைக்கு மக்கள் போகவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

ஈரோட்டில் நான் என்ன ஃபார்முலாவை பயன்படுத்தினேன் என்று தெரியவில்லை. மக்களை மட்டுமே சந்தித்து வாக்கு சேகரிக்கிறேன். சட்டத்தையும், தேர்தல் விதிமுறைகளையும் மதிக்காதவர் தான் சீமான். அவர் முறையாக அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்தால், தேர்தல் ஆணையம் தடுக்கத்தான் செய்வார்கள். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?

இதையும் படியுங்கள் : அச்சமின்றி செய்திகளை வழங்குங்கள்! – செய்தியாளர்களுக்கு பிபிசி தலைமை இயக்குனர் அறிவுரை

கட்சியில் அங்கீகாரம் கிடைப்பது, சின்னம் கிடைப்பதெல்லாம் பெரிதல்ல. மக்களின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானவர் அல்ல. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு எந்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். மக்களால் புறக்கணிப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. அவர் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வருவதால் மக்களுக்கு ஒரு பயனுமில்லை. ஊடகங்கள் தான் அவரை பெரிதாக்குகின்றன” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.