மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் காட்டுத் தீ -மரங்கள் எரிந்து நாசம்

மேற்குத் தொடற்சிமலைப் பகுதியான சிறுமுகை வனச்சரக வனப்பகுதியில் குஞ்சப்பனை அருகே பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு செடிகள், மரங்கள் ஆகியவை எரிந்து நாசமாகியது.  வறட்சியால் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் பயங்கர காட்டு தீஏற்பட்டு ஏராளமான…

மேற்குத் தொடற்சிமலைப் பகுதியான சிறுமுகை வனச்சரக வனப்பகுதியில் குஞ்சப்பனை அருகே பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு செடிகள், மரங்கள் ஆகியவை எரிந்து நாசமாகியது. 

வறட்சியால் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ
ஏற்பட்டு ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகின. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான நீல மலைப்பகுதியில் தற்போது வறட்சி நிலவ துவங்கியுள்ளது .

குறிப்பாக சிறுமுகை வனச்சரக வனப்பகுதி அமைந்துள்ள பெத்திகுட்டை,உளியூர்,
கோத்தகிரி சாலை வனப்பகுதியில் மரங்கள்,செடி, கொடிகள் காய்ந்து வரும் நிலையில்
இன்று மாலை குஞ்சப்பனை அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டு தீ
ஏற்பட்டது.

காட்டு தீ மளமளவென இரயில் பெட்டி போல பரவி பல கிலோமீட்டர் தொலைவிற்குக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது இதில் வனத்திலிருந்த பல அரியவகை மரங்கள், செடிகள், கொடிகள் என எரிந்து நாசமாகின. தீ பரவிய இடம் அடர் வனப்பகுதி என்பதாலும் இரவு நேரம் என்பதாலும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

-வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.