ஊரடங்கின் பலன் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து!

முழு ஊரடங்கின் பலன் அடுத்த ஒரு வாரத்தில் கிடைக்கும் என சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்…

முழு ஊரடங்கின் பலன் அடுத்த ஒரு வாரத்தில் கிடைக்கும் என சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறினார். கொரோனா நெருக்கடியில் இருந்து தமிழகம் மீண்டு வருவதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருவதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், அடுத்த 10 நாட்களுக்கு முழு ஊடரங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும கேட்டுக் கொண்டார். ஊரடங்கின் பலன் அடுத்த வாரத்தில் தெரியவரும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.