முக்கியச் செய்திகள் கொரோனா

கொரோனா தடுப்பூசி யார் போடலாம்? யார் போடக்கூடாது?

யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்பது குறித்த அரசின் வழிகாட்டுதல்களும் அறிவிப்புகளும் என்னென்ன? தற்போது பார்க்கலாம்..

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது?

 • ஏற்கனவே தடுப்பூசி பெற்று அந்த மருந்தில் உள்ள வேதிப்பொருட்களால் ஒவ்வாமை ஏற்பட்டவர்கள்.
 • கர்ப்பிணிகள் – பாலூட்டும் தாய்மார்கள்
 • கடும் காய்ச்சல் மற்றும் தொற்று ஏற்பட்டிருப்பவர்கள்
 • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது.

யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போடலாம்?

 • ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட 20 வகையான பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • இதய செயலிழப்புக்காக சிகிச்சை மேற்கொண்டவர்கள்.
 • இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள்.
 • இடது வெண்ட்ரிகுலார் செயலிழப்புக்காக சிகிச்சை மேற்கொண்டவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.
 • இதய குழாய் அடைப்புக்கு சிகிச்சை பெற்றவர்கள்.
 • பிறப்பிலேயே இதய குறைபாட்டுடன் பிறந்தவர்கள்.
 • நீரிழிவு சிகிச்சை, உயர்ரத்த அழுத்தம், ரத்தக்குழாயில் பெரியளவிலான பாதிப்பு உள்ளவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.
 • மார்பக வலி உள்ளவர்கள், பக்கவாதம் மற்றும் ரத்த அழுத்தம், 10 ஆண்டுகளாக நுரையீரல் தமணி ரத்த அழுத்தத்திற்காக சிகிச்சை எடுப்பவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.
 • 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு சிகிச்சையில் உள்ளவர்கள்.
  சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு சிகிச்சை பெற்றவர்கள்.
  ஹீமோடையாலிசிஸ் செய்தவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்
 • கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை, சுவாசக்குழாய் தொற்றுக்காக சிகிச்சை எடுத்தவர்களும் தடுப்பூசி போடலாம்.
 • தொண்டை புற்று, ரத்த புற்றுநோய், வெள்ளை அணுக்கள் பாதிப்பு, புற்றுநோய் சிகிச்சையில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
 • சிவப்பணுக்கள் குறைபாடு, ரத்த சோகை உள்ளவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்
 • ஹெச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள், சிறப்பு குழந்தைகள், அமில வீச்சால் சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டவர்களுடன் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க மருந்து எடுப்பவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்
 • தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பெற்று தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்ற இந்திய ஜோடி

Web Editor

ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? இளையராஜா

Gayathri Venkatesan

சிதம்பரம் நடராஜர் கோயில் நலன் மீது அக்கறை உள்ளதா? – அரசு அதிரடி முடிவு

Web Editor