கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தோரின் சதவிகிதம், அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக்கட்டு படுத்த தமிழகத்தில் ஏற்கனவே இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் கடந்த வாரம் கொரோனாவைக்கட்டுபடுத்த பல முக்கிய நகர்வுகளை மேற்கொண்டார். இதில் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிப்பது தொடர்பான முடிவும் அடங்கியிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த முழு ஊரடங்கில் நியாயவிலைக்கடைகள், அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சாலையோர காய்கறிக்கடைகள், பூக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படும்.