தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவரது மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். ’மகிழ்மதி இயக்கம்’ என்ற அமைப்பை நடத்தி வரும் திவ்யா சத்யராஜ், இந்த இயக்கத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைந்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சமீப நாட்களுக்கு முன் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்துள்ளார். இந்நிகழ்வின் போது பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.







