தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் வெளி நடப்பு செய்தனர். வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் முதலமைச்சர் விஜய் மீது விமர்சனங்களை வைத்திருந்தார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, “அப்பாவைக் காணோம்” என்று கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது.
இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் “கணவனைத் தேடும் மனைவி” என்று பேசியதும் தவறுதான். “ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்” என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.




