குறைந்த விலையில் மெட்டா க்ளாஸை அறிமுகப்படுத்தும் மெட்டா…!

மெட்டா தனது சொந்த வடிவமைப்பில் ‘மெட்டா கிளாசஸ்’ என்ற பெயரில் ஒரு புதிய வகை செயற்கை நுண்ணறிவு கண்ணாடிகளை வெளியிட்டுள்ளது

மெட்டா மற்றும் ரேபன் நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட் கிளாஸ்களை தயாரித்து வந்தன. இந்த நிலையில் மெட்டா தனது சொந்த வடிவமைப்பில் ‘மெட்டா கிளாசஸ்’ என்ற பெயரில் ஒரு புதிய வகை செயற்கை நுண்ணறிவு கண்ணாடியை வெளியிட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் கிளாஸானது 299 டாலர் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வர உள்ளது. இது மெட்டா ரே-பான் கிளாஸைவிட விட 80 டாலர் குறைவாகும்.

இந்த கிளாஸ் அன்றாட வாழ்க்கையை சிரமமின்றி நிர்வகிக்கவும் , ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்கவும், கால அட்டவணையை கையாளவும் உதவியாக இருக்கும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்டா க்ளாஸ் குறித்து மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் கூறியிருப்பதாவது:

இந்த புதிய AI கண்ணாடிகள், வண்ணங்கள், லென்ஸ்கள் மற்றும் பிரேம்களில் மாறுபடும். 26 வகைகளிலும், மூன்று ஃபிரேம்களிலும் கிடைக்கும். அதேபோல ‘பிரத்யேக செயல்பாட்டு பட்டனும்’ வருகின்றன. அதை பயனர்கள் மெட்டா AI-ஐ அணுக அல்லது மற்ற அம்சங்களை விரைவாகத் தொடங்க பயன்படுத்தலாம். இந்த சாதனம் மேலும் ‘ஓபன் ஏர்’ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, இது தொலைபேசி அழைப்புகள், இசை, பாட்காஸ்ட்கள் மற்றும் ஆடியோபுக்குகளிலிருந்து வரும் ஆடியோவை பயனரைச் சுற்றியுள்ள சூழலைப் பற்றி அறிந்திருக்கச் செய்யும். இந்த கண்ணாடியின் பேட்டரி 8 மணி நேரம் வரை நிலைத்திருக்கும். 40 மணிநேர பேட்டரி சக்தியுடன் கூடிய கேசுடன் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.