FIFA 2026 : ஹைதியை 4-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மொராக்கோ வெற்றி…!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஹைதியை 4-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மொராக்கோ வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரானது (FIFA) அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ‘சி’ பிரிவு லீக் ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஹைதி அணிகள் மோதின.

அட்லாண்டா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 10-வது நிமிடத்தில் ஹைதி அணியின் யாசின் பவ்னவ் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து போட்டியின் 43-வது நிமிடத்தில் ஹைதியின் வில்சன் இசிடோர் 2-வது கோலை அடித்தார்.

மறுபுறம் மொராக்கோ அணியில் போட்டியின் 39-வது நிமிடத்தில் அச்ரப் ஹகீமி அணிக்கான முதல் கோலை அடித்தார். அதன்பின்னர் மொராக்கோவின் இஸ்மாயில் சாய்பாரி 46-வது நிமிடத்திலும், சவுபியான் ரகீமி 78-வது நிமிடத்திலும், கெஸ்சிம் யாசின் 89-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். இதனால், போட்டி முடிவில் 4-2 என்ற புள்ளி கணக்கில் ஹைதியை வீழ்த்தி மொராக்கோ வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.