தமிழ் நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, மாநிலம் இருளில் மூழ்கி உள்ளது என்றும் இதற்கு தவெக அரசின் நிர்வாக திறன்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், திமுக ஆட்சியில் மின்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தமிழ் நாடு மின் துறையின் நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்தபடி, தமிழ் நாடு மின் துறை குறித்த வெள்ளை அறிக்கை இன்று (ஜூன் 25) வெளியிடப்பட உள்ளது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு, வருவாய் மற்றும் செலவினங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.




