மகப்பேறு விடுமுறை எடுக்க உள்ளேன் – நடிகை சமந்தா…!

நடிகை சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்த இவர் கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்தார்.

நடிகை சமந்தா தானே தயாரித்து நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்’. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு கதை எழுதியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகியுள்ள இத்திரைப்படம் உலகளவில் ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று பரவி வந்தது. அந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

மா இன்டி பங்காரம் திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் சமந்தா பேசுகையில், தான் மகப்பேறு விடுமுறை எடுக்க உள்ளதாகவும் மிகவும் மகழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.