தருமபுரி அருகே தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தி கிராமத்தில் வசித்துவந்த கிருஷ்ணய்யர்- சுலோச்சனா தம்பதி, கடந்த 12ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்காக, அவர்கள் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகத்தின்பேரில், அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ஊரடங்கில் வேலை இல்லாததால், பணத்துக்காக தம்பதியை அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிமுக தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த வேலவன் என்பவர் உள்ளிட்ட மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.







