முதலமைச்சர் விஜய் தலைமையில் MSME நிறுவனங்கள் துறை குறித்த ஆய்வுக்கூட்டம்…!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி கூடுகிறது. இதில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனையொட்டி முதலமைச்சர் விஜய் பல்வேறு துறைகள் குறித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், இ.ஆ.ப, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.பட நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ.சித்திக், இ.ஆ.ப. மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.