தேவர் ஜெயந்தி: சென்னை நந்தனத்தில் இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை – அதிமுக அறிவிப்பு

தேவர் குருபூஜையையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்த உள்ளார். அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நிகழ்வுக்கு…

தேவர் குருபூஜையையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்த உள்ளார்.

அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நிகழ்வுக்கு தேவர் நினைவிடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளனர். தேவர் சிலைக்கு தங்கக் கவசத்தை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , தேவர் குருபூஜையின் போது எங்கு அஞ்சலி செலுத்துவார் என்று கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்கள் எனவும் அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.