சென்னை ராயபுரத்தில் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னை ராயபுரத்தில் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய மீனவ சங்க தலைவர் எம்.இ.ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், அகில இந்திய மீனவ சங்கத்தின் சார்பாக ஏராளமானோர் கலந்து கொண்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை அகில இந்திய மீனவ சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.ரேகா குளோரி ஏழை மக்கள் இரண்டு பேருக்கு தையல் மிஷின்களை வழங்கினார்.
இதைதொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவரும் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.







