கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது, சம்பவம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை விரைந்துள்ளனர். இந்த நிலையல், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
https://twitter.com/CMOTamilnadu/status/1585174374206046209
கோயம்புத்தூர் சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். அப்போது, கோவை சம்பவம் தொடர்பாக விசாரணை நிலவரம், கைது நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.







