ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், சுமார் மூன்று லட்சம் ஏக்கர் நெல் விவசாயம் செய்யப்பட்டது.
இதில், தென்கிழக்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் வழக்கத்தை விட மிகக்
குறைவான அளவே பெய்தது. இதனால், நெற்பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதையும் படியுங்கள் : பிரதமர் வேட்பாளர் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெறக் காரணம் என்ன?
இதனால் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூபாய் 30,000 வழங்க வேண்டும் என்றும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், பதிவு செய்த சுமார் 1,50,000 விவசாயிகளுக்கு, இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும், பயிர் காப்பீடு செய்வதற்கு தமிழ்நாடு அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் தனியாக ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
– கு.பாலமுருகன்







