தையல் கற்றுக் கொடுத்து 100க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கிய விருதுநகர் பெண்!

விருதுநகரில் கடந்த 11 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் கலை கற்றுக் கொடுத்து, அதில் 100-க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்களை வளர்மதி என்ற தையல் கலைஞர் உருவாக்கி உள்ளார் . விருதுநகர்…

விருதுநகரில் கடந்த 11 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் கலை கற்றுக் கொடுத்து, அதில் 100-க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்களை வளர்மதி என்ற தையல் கலைஞர் உருவாக்கி உள்ளார் .

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி. இவர் கடந்த 17 ஆண்டுகளாக தையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். 12-ம் வகுப்பு படித்து விட்டு தையல் படிப்பு படிக்கும் போது பல சிரமங்களை சந்தித்த அவர், அத்தகைய சிரமங்களை ஏழை, எளிய பெண்கள் அடையக் கூடாது என்று எண்ணி, அவரிடம் தையல் பயில வரும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் தையல், எம்ப்ராய்டரி உள்ளிட்ட கலைகளை கற்றுத் தருகிறார்.

கடந்த 11 ஆண்டுகளாக தையல் கலையை பிறருக்கு கற்றுக்கொடுத்து வரும் இவரிடம், தற்போது வரை 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தையல் பயின்று வருகின்றனர். காலை முதல் மாலை வரை குடும்பத் தலைவிகளுக்கும், மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் இரவு 8 மணி வரை தையல் பயிற்றுவித்து வருகிறார்.

வளர்மதியிடம் தையல் பயில வந்த பிறகு மனதைரியமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருப்பதாகவும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் பொருளாதார ரீதியில் பணம் சம்பாதிக்க உதவும் வகையில் இந்த தையல் கலை இருப்பதாகவும் வளர்மதியின் மாணவர்கள் கூறுகின்றனர்.

– அனகா காளமேகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.