நாமக்கல் மாவட்டம் சால பாளையத்தில் ஜல்லிக்கட்டு காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சால பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது வீட்டில் 11 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். அதில் கட்டப்பா என பெயரிடப்பட்ட காளை, தமிழ்நாட்டுன் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், பாத்திரங்கள் என பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்ட கட்டப்பா காளைக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இருப்பினும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கட்டப்பா என்ற காளை இன்று உயிரிழந்தது.
இதையும் படியுங்கள் : பிரதமர் வேட்பாளர் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெறக் காரணம் என்ன?
இதனையடுத்து மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காளையின் உடலுக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கிராம மக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் காளையின் உடல் மாட்டுகொட்டகையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காளை உயிரிழந்த சம்பவம் அதன் உரிமையாளரை மட்டுமல்லாமல், அப்பகுதி பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
– வேந்தன்