தமிழகம் உள்பட 6 மாநிலங்களில், அதிக உயிரிழப்புகள்: மத்திய அரசு

கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில், கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் பதிவாவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் 7 மாநிலங்களில்…

கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில், கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் பதிவாவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் 7 மாநிலங்களில் மட்டுமே, கொரோனாவால் நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாவதாகவும் 6 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகளே பதிவாவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா தொற்றால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் திறனை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.