மே மாத இறுதிக்குள் 30 லட்சம் டோஸ்கள் ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய தூதர், இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்தை தொடர்ந்து, ஸ்புட்னிக் லைட் எனும் தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், இருநாட்டு நல்லுறவில் புதிய உச்சம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
மே மாத இறுதிக்குள் 30 லட்சம் டோஸ்கள் ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைக்கலாம் என்று கூறிய அவர், ஜூன் மாதத்தில் 50 லட்சம் டோஸாக அதிகரிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். ஆண்டு இறுதிக்குள், தரையில் இருந்து வான்வெளியில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கு எஸ்-400 ரக ஏவுகணைகள் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.