முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

ஆண் குழந்தைக்கு அம்மாவானார் பாடகி ஸ்ரேயா கோஷல்!

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்கிறார்.

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடி வருகிறார். நான்கு தேசிய விருதுகளையும் பல்வேறு மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ள ஸ்ரேஷா கோஷலின் இனிமையானக் குரலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியிருக்கிறார். பிதாமகன் படத்தில், ’இளங்காற்று வீசுதே..’ 7ஜி ரெயின்போ காலனி’ படத்தில், ’நினைத்து நினைத்து ‘, கமலின் ‘விருமாண்டி’ படத்தில், ’உன்னை விட ’, ’சில்லுனு ஒரு காதல்’ படத்தில், ’முன்பே வா என் அன்பே வா’, பருத்திவீரன் படத்தில், ’ஐயையோ..’ உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்துகொண்டார். கடந்த மார்ச் 4 ஆம் தேதி, தான் தாய்மை அடைந்திருப்பதாக சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஷ்ரேயா கோஷலுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கடவுள் அருளால் இன்று மதியம் விலைமதிப்பற்ற ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. இதற்கு முன் அனுபவத்திராத மகிழ்ச்சியான உணர்வை இப்போது பெறுகிறேன். ஷைலாதித்யா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களின் ஆசிர்வாதத்துக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அவருக்கு ரசிகர்களும், சக கலைஞர்களும் ஸ்ரேயாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:

Related posts

1 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்

Gayathri Venkatesan

டவ் தே பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் ஆய்வு

Karthick

இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

Karthick