தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோடி உச்சநிதிமன்றத்தை நோக்கி இந்தியா கூட்டணி கட்சி பேரணி செல்வதற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறினார், “வாக்குகள் திருடப்பட்டதற்கு எதிராக டெல்லியில் பல நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லிக்குள் மக்கள் நுழைவது தடுக்கப்படுகிறது. அது ஒரு சிறைச்சாலைபோல மாற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். 2-வது நாள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம்.அனுமதி மறுக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்க வருவோரை போலீஸ்கார்களை ஏவி மோடி அரசு தடுக்கிறது. மோடி அரசு மிகப்பெரிய தவறை செய்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் வைத்து தாக்கப்படுகிறார்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை மோடி அரசு பாதுகாக்கிறது.
அரசியலமைப்பு தாக்கப்படுகிறது… இந்த எதிர்ப்பு ஒரு நாள் நிகழ்வல்ல; அது தொடரும்
காவல்துறை, பாதுகாப்பு படை வீரர்கள், இந்திய மக்கள் ஒரு பக்கத்திலும், ‘வாக்குத் திருட்டுக்கு’ வழிவகுத்து நாட்டைக் கடத்திச் செல்லும் நரேந்திர மோடி, அமித் ஷா, அஜித் டோவல், ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் மறு பக்கத்திலும் உள்ளனர்.
இவையெல்லாம் ஏன் நடக்கின்றன? ஏனென்றால், இரண்டு தேர்தல் ஆணையர்கள் எழுப்பிய கேள்வியைத்தான் நாங்களும் கேட்கிறோம்: கியானேஷ் குமார் ஏன் ராஜினாமா செய்யவில்லை? இப்போதெல்லாம் எங்களுக்கு எல்லா இடங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன. கியானேஷ் குமார், உங்கள் நிலைமை எங்களுக்குத் தெரியும்.” “இரவில் உங்களுக்குத் தூக்கம் வராது என்பது எங்களுக்குத் தெரியும்; கவலைப்பட வேண்டாம், நாங்கள் உங்களைச் சும்மா விடப்போவதில்லை. தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளால், தேர்தல் ஆணையராக நீங்கள் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை நான் நேரடியாகச் சொல்கிறேன். லட்சக்கணக்கான மக்கள் உங்களையும் உங்கள் செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்; அவர்கள் அதை நிறுத்தப்போவதில்லை.
“ஆர்எஸ்எஸ் (RSS) உறுப்பினர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிய அனுமதிக்கப்படும் நிலையில், இளைஞர்களை மட்டும் ஏன் தடுத்து நிறுத்தும்படி உத்தரவிடப்படுகிறது என்பது குறித்துக் காவல்துறையினரிடையே கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உள்துறை அமைச்சகம், டெல்லி காவல்துறை, சிஆர்பிஎஃப் (CRPF) மற்றும் ஐடிபிபி (ITBP) ஆகியவற்றிலும் இத்தகைய கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்தியா’ (INDIA) கூட்டணியின் போராட்டப் பேரணி, கன்னாட் பிளேஸில் உள்ள பரகம்பா சந்திப்பில் மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் என்றும், இதில் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மக்களும் பங்கேற்க வேண்டும். பேரணியில் நேரடியாகப் பங்கேற்க முடியாதவர்கள், மனு தாக்கல் செய்வதற்காகக் குழுவினர் உச்ச நீதிமன்றத்தை அடையும்போது தங்கள் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.




