“ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் விஜய் பாலாஜி!

ஈரோடு மாநகராட்சியில் 100% சொத்து வரி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மாநகராட்சியில் பருவகால மழை தொடர்பாக ஆணையாளர் உட்பட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் பருவமழை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதியில் ஓடைகள் தூர்வாரும் பணிகள், சாக்கடை, குடிநீர் போன்ற அடிப்படை பிரச்சனைகள் தீர்வு காண உத்தரவிடபட்டுள்ளது. பருவமழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு மாநகராட்சியில் 100% சொத்து வரி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலவச வேட்டி, சேலை பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் குறித்த நேரத்தில் இலவச வேட்டி சேலை வழங்கப்படும்.

இலவச வேட்டி சேலை உற்பத்தியின் கூலி உயர்வு தொடர்பாக நெசவாளர்கள் கோரிக்கை கேள்விக்கு, நெசவாளர்கள் கூலி உயர்வு குறித்து அமைக்கப்பட்ட ஐவர் குழு அமைத்து அறிக்கை பெறப்பட்டு முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வாரத்திற்குள் கூலி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.