முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகர் சூர்யாவை பகிரங்கமாக மிரட்டுவதா? மார்க்சிஸ்ட் கண்டனம்

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு பாஜக எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்தக் கட்சியில் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 என்பது படைப்பாளிகள் மீதும், திரைப்படம் உள்ளிட்ட ஒளிப்பதிவு படைப்புகளின் மீதும் கொண்டு வரப்பட்டுள்ள நேரடியான தாக்குதலாகும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பல படைப்பாளிகளும், அறிஞர்களும் இத்தகையதொரு மிக மோசமான சட்டத்திருத்தம் உடனடியாக கைவிடப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட திரையுலகினர் ஒன்றிணைந்த கடிதம் வாயிலாகவும் இக்கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு விடுத்துள்ளனர். தணிக்கை குறித்த ஆட்சேபனை இருந்தால் படைப்பாளிகள் மேல்முறையீடு செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குழுவை தன்னிச்சையாகக் கலைத்துவிட்டு, இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மத்திய அரசே சூப்பர் தணிக்கைக்குழுவாக செயல்பட்டு அவர்களது சித்தாந்தத்திற்கும், அரசியலுக்கும் ஒவ்வாத திரைப்படங்களை வெளியிடவிடாமல் தடுக்கும் பாசிச நோக்கம் இதில் உள்ளடங்கியுள்ளது.

ஏற்கனவே ஊடக சுதந்திரம் குறித்த தரப்பட்டியலில் 180 உலக நாடுகளில் இந்தியா 142வது இடத்தில் இருக்கிறது. இந்தப்பின்னணியில் தமிழக திரைக் கலைஞர் சூர்யாவும், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவே இருக்க வேண்டுமேயல்லாது, அதன் குரல் வளையை நெரிப்பதாக இருக்கக் கூடாது” என தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

கே.பாலகிருஷ்ணன்

ஜனநாயக ரீதியாக தனது கருத்தை சமூக ஊடகத்தின் வாயிலாக பதிவு செய்த சூர்யாவிற்கு, பாஜக இளைஞர் அணியினரின் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பகிரங்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவின் இத்தகைய அணுகுமுறையும், பகிரங்க மிரட்டல் போக்குகளும் ஒரு போதும் ஏற்கத் தக்கவையல்ல என்பதோடு, ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

எனவே அரசியல் சாசனம் அனைவருக்கும் வழங்கியுள்ள எந்தவொரு உரிமையின் மீதும் யாரும் கைவைக்க அனுமதிக்க முடியாது என்பதோடு, பாஜகவின் இத்தகைய பாசிச நடவடிக்கைகளை கண்டிக்கவும், மேற்கூறிய சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தியும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரலெழுப்ப முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு; இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு!

Saravana

அரசு மருத்துவமனைகளில் விரைவில் அறிமுகமாகிறது தானியங்கி மருந்து தரும் இயந்திரம்

Halley Karthik

தைப்பூசம்; கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுட்டு வழிபாடு

G SaravanaKumar