மனைவியுடன் பேசிய ஆட்டோ ஓட்டுநருக்கு கத்தி குத்து

தன்னுடைய மனைவியுடன் பேசிய ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய வாலிபரை கோயம்பேடு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார். தனது மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும்…

தன்னுடைய மனைவியுடன் பேசிய ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய வாலிபரை கோயம்பேடு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார். தனது மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில், மனைவி நித்யாவை பார்ப்பதற்காக அவர், கோயம்பேட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர் ஆட்டோ ஓட்டுநர் சக்கரவர்த்தி என்பவருடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த சிவக்குமார் ஆட்டோ ஓட்டுநர் சக்கரவர்த்தியை தான் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவருக்கு தலை மற்றும் முகத்தில் 16 தையல் போடப்பட்டுள்ளது. இதையடுத்து சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர். அத்துடன், அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.