முக்கியச் செய்திகள் கொரோனா செய்திகள்

கொரோனாவிலிருந்து குணமடைவோர் சதவிகிதம் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வாலும், நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே. பாலும் டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் சதவீதம் 96.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக லாவ் அகர்வால் தெரிவித்தார். நாடு முழுவதும் 51 பேர் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

அதோடு, நாடு முழுவதும் 27 கோடியே 27 லட்சம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும், இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 84 லட்சம் என்றும் அவர் கூறினார். அமெரிக்காவைவிட, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் வேகம் அதிகம் என தெரிவித்துள்ள லாவ் அகர்வால், 32 கோடி தடுப்பூசிகளை செலுத்த அமெரிக்கா 193 நாட்களை எடுத்துக்கொண்டதாகவும், இந்தியாவில் 163 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டார். 

கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்துவதற்கு மட்டுமே மாடெர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில், Pfizer தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு விடும் என்றும் நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்தார். கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடெர்னா ஆகிய 4 தடுப்பூசிகளும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பானது என்றும், இந்த தடுப்பூசிகள் குழந்தைபேறுவை தடுக்காது என்றும் வி.கே. பால் குறிப்பிட்டார். 

Advertisement:

Related posts

15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Ezhilarasan

புதுச்சேரியில் இ.கம்யூ, விசிக-விற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!

Gayathri Venkatesan

கூட்டணி குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் : ராமதாஸ்

Niruban Chakkaaravarthi