முக்கியச் செய்திகள் தமிழகம்

கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா உட்பட 500 பேர் மீது வழக்கு

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திற்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரத்தில் சில தினங்களுக்கு முன் சிவி சண்முகம் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போது அதிமுகவில் உறுப்பினராக கூட தகுதியில்லாத சசிகலாவிற்கும் அவரை சார்ந்த குடும்பத்தாருக்கும் அதிமுகவில் ஒரு போதும் இடமில்லை என தெரிவித்திருந்தார்.

இதன் பின்பு தனக்கு பல்வேறு நபர்கள் தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாசமாக பேசுவதாகவும் ரோஷனை காவல் நிலையத்தில் சிவி சண்முகம் புகார் அளித்தார். புகாரையடுத்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட 500 நபர்கள் மற்றும் சசிகலா மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

சென்னையில் வீடு வீடாக மீண்டும் கொரோனா பரிசோதனை!

Gayathri Venkatesan

இன்று கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

பூத்துக் குலுங்கும் 15 லட்சம் டியூலிப் மலர்கள்!

எல்.ரேணுகாதேவி