விஜய் – ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படதிற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இது விஜயின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
இதையடுத்து பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று அட்லி இயக்கத்தில் விஜய் சமந்த ஆகியோரின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தெறி’ படம் ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிதாக பொங்கலுக்கு ரிலீசாகும் படங்களின் தயாரிப்பாளர் விடுத்த கோரிக்கையை ஏற்று ‘தெறி’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார்.
இந்நிலையில், தெறி படத்தின் புதிய ரீ-ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். அதன்படி, தெறி படம் வரும் 23ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் நாளை வெளியாகும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அஜித்குமார் – வெங்கட்பிரபு கூட்டணியில் கடந்த 2011ல் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி ரீ-ரிலாசகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜயின் தெறி படமும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நேரடி வெளியீட்டினால் நேருக்கு நேர் மோதி வந்த அஜித், விஜய் படங்கள் தற்போது மறு வெளியீடு மூலம் மோத இருக்கின்றன. இது இரு தரப்பு ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.









