முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 27 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. புதிதாக தொற்றுப் பாதித்தவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக 26 ஆயிரத்து 513 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 26 ஆயிரத்து 513 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்த 31 ஆயிரத்து 673 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 18 லட்சத்து 02 ஆயிரத்து 176 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 490 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர். 4234 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டில் 1106 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 519 பேருக்கும் திருவள்ளூரில் 744 பேருக்கும் திருச்சியில் 987 பேருக்கும் கோவையில் 3332 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது!

Ezhilarasan

95 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு!

Karthick

டெல்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

Karthick