டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிர்வாக இயக்குநர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR) தலைவர் பல்ராம் பார்கவா மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால் ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது, கொரோனா சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 30 மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது எனவும், 32 மாநிலங்களில் குணமடைவோர் எண்ணிக்கை, தினசரி பாதிப்பை விட அதிகரித்து வருவதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய. ஐ.சி.எம்.ஆர் நிர்வாக இயக்குனர் பலராம் பார்கவா, ஆகஸ்ட் மாதத்திற்குள், ஒரு நாளைக்கு 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
உலகில் தடுப்பூசிகள் தயாரிக்கும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது சவாலான காரியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.