அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு, ஊதிய முரண்பாடு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், பணியிடம் மாற்றில் வெளிப்படை தன்மை உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்பாக அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் சங்கங்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் நடைபெற்றது. இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியம், நேற்று 7,427 ஆக இருந்த கொரோனா தொற்றின் அளவு இன்று 6,895 ஆக குறைந்துள்ளதாக கூறிய அவர், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 13,156 ஆக உள்ளதாக கூறினார்.
மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்தள்ளதாகவும் அந்த எண்ணிக்கை தற்போது56,266 ஆக உள்ளது, எண்ணிக்கை நல்ல நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பது நிம்மதி அளிப்பதாக கூறினார்.
மருத்துவர்களுக்க்கான உரிமைகள், ஊதியம், சலூகைகள் உள்ளிட்டைவைகள் குறித்து மருத்துவ சங்கங்களுடன் பேசியுள்ளதாக தெரிவித்த அவர், அனைத்து சங்கங்களை சார்ந்த மருத்துவர்களும் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என கூறினார். மருத்துவர்களின் கோரிக்கைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் தெரிவித்த கோரிக்கைகள் முதலமைச்சரிடம் கொண்டு செல்லப்படும் எனவும் உறுதியளித்தார்.
தமிழ்நாட்டில் இதுவரை 2,510 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு உள்ளதாகவும் கறும்பூஞ்சைக்கான இரண்டு வகை மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பின்னர் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எப்போது செயல்பட தொடங்கும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 11 மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகவும், அதேபோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் பணிகளையும் வேகப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.







