தாப்பாத்தி இலங்கை அகதி முகாமில் ஆய்வு மேற்கொண்ட திமுக எம்பி கனிமொழி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாப்பாத்தி இலங்கை அகதி முகாமில் ஆய்வு மேற்கொண்ட திமுக எம்பி கனிமொழி, 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தப்பாத்தி இலங்கை அகதிகள்…

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாப்பாத்தி இலங்கை அகதி முகாமில் ஆய்வு மேற்கொண்ட திமுக எம்பி கனிமொழி, 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமிற்கு நேரில் சென்ற தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி ஆய்வு மேற்கொண்டார்.

தாப்பாத்தி அகதிகள் முகாமில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மேலும் அவர்கள் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் கழிப்பறைகளை பார்வையிட்ட கனிமொழி எம்பி திமுக அரசு அகதிகள் முகாமிற்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மக்களிடம் உறுதி அளித்தார்.

தொடர்ந்து இந்த அகதி முகாமில் உள்ள இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி மளிகை மற்றும் காய்கறிகளை 300 குடும்பங்களுக்கு வழங்கினார்.இந்த ஆய்வு மற்றும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.