கருப்பு பூஞ்சை நோய்க்கு, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த கொரோனா பரவல், தற்போது குறைந்துள்ளதாக கூறினார். மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கருப்பு பூஞ்சை நோய்க்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிகிச்சை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.







