முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புக்களை அரசு குறைந்து காட்டுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, எடப்பாடி பயணியர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை அவர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,“தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்த முந்தைய அதிமுக அரசு தவறிவிட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதில் உண்மை இல்லை.

முதல் அலையை கட்டுப்படுத்த தனது தலைமையிலான அரசு உரிய நடவடிக்கையை எடுத்ததாக விளக்கம் அளித்தார். மு.க. ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் இதன் காரணமாகவே தடுப்பூசி போட்டுக்கொள்ள பலரும் முன்வரவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக் குறிப்பிட்ட அவர், தொற்று காரணமாக நிகழும் உயிரிழப்புக்களை தமிழக அரசு குறைந்து காட்டுவதாகக் குற்றம் சாட்டினார். உண்மை நிலையை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement:

Related posts

திருமணத்தை தாண்டிய உறவு: பெண்ணுக்கு தீ வைத்து உடன் ஆணும் உயிரிழப்பு

Gayathri Venkatesan

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகை!

Gayathri Venkatesan

டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து வரும் 16ம் தேதி தண்ணீர் திறப்பு!

Jeba