கொரோனா தொற்றால் உயிரிழந்த நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவர்களின் முழு விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை மண்டல அலுவலர்களுக்கு தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
அதன்படி தற்போதும் கொரோனா தொற்றால் உயிரிழந்த நியாய விலைக் கடை ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதன்காரணமாக கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்கள் குறித்த முழு விவரங்களை அனுப்புமாறு, கூட்டுறவுத்துறை மண்டல அலுவலர்களுக்கு, தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.







