முக்கியச் செய்திகள் இந்தியா

நாட்டில் குறையும் கொரோனா!

தேசிய அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது அதோடு நேற்று ஒரே நாளில் சுமார் 2.6 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 459 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 23 லட்சத்து 43 ஆயிரத்து 152 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று மட்டும் 20 லட்சத்து 70 ஆயிரத்து 508 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 364 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 660 பேர் கடந்த 24 மணி நேரத்தில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 3 லட்சத்து 18 ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில், நாடு முழுவதும் இதுவரை 2 கோடியே 48 லட்சத்து 93 ஆயிரத்து 410 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம், குணமடைவோர் விகிதம் 90.34 சதவீதமாக ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

கடந்த 24 மணிநேரத்தில் 29 லட்சத்து 19 ஆயிரத்து 699 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, இதுவரை மொத்தம் 20 கோடியே 57 லட்சத்து 20 ஆயிரத்து 660 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement:

Related posts

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி

Saravana Kumar

காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது: தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை?

Saravana

கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!

Gayathri Venkatesan