கடந்த வாரம் 6 பில்லியன் டாலர் குறைவு , அதற்கு முந்தைய வாரம் 8 பில்லியன் டாலர் குறைவு என தொடர்ச்சியாக நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்து வரும் செய்தியை பார்க்கலாம்.
இந்திய நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு பிப்ரவரி 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தின் நிலவரப்படி 5 புள்ளி 68 பில்லியன் டாலர் குறைந்து, 561.27 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கு முந்தைய வாரமான, பிப்ரவரி 10 ஆம் தேதி நிலவரப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு $8.31 பில்லியன் குறைந்து $566.94 பில்லியனாக இருந்தது. அப்போது கையிருப்பு 8.3% சரிந்து, 11 மாதங்களுக்கும் மேலான மிகப்பெரிய சரிவாக இருந்தது.
இதனையும் படியுங்கள்:அதானி நிறுவனத்தில் எல்ஐசி, எஸ்பிஐ செய்துள்ள முதலீட்டு அளவுகள் எவ்வளவு?
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 645 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது குறிப்பிடதக்கது. ஆனால் தற்போது சர்வதேச பொருளாதார தாக்கத்தின் எதிரொலி, பணவீக்கம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற காரணிகளால் அந்நிய செலாவணி கையிருப்பு குறைகிறது என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கிறது

இதனையும் படியுங்கள் : 24 நாட்களில் அதானியின் ரூ.12 லட்சம் கோடி அம்பேல்!
இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்துக்களில் பெரும்பான்மையாக அமெரிக்க டாலராக உள்ளது. டாலர் அளவும் 4 புள்ளி 52 பில்லியன் டாலர் குறைந்து 496 பில்லியன் டாலராக உள்ளது. இதைத்தவிர யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்கா அல்லாத பிற நாடுகளின் நாணய மதிப்பிலும் அந்நிய செலாவணீ, தங்கம் கையிருப்பு 1 பில்லியன் டாலர் குறைந்து, தங்கம் கையிருப்பு 41 பில்லியன் டாலராக உள்ளது.
–ரா.தங்கபாண்டியன்,நியூஸ் 7 தமிழ்







