ஓபிஎஸ் தாயாரின் மறைவு வருத்தமளிக்கிறது – இபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வம் தயாரின் மறைவு வருத்தமளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு சில வாரமாக தேனியில் உள்ள…

ஓ.பன்னீர்செல்வம் தயாரின் மறைவு வருத்தமளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு சில வாரமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று 10 மணியளவில் பழனியம்மாள் உயிர் பிரிந்தது. இதையடுத்து சென்னையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்துக்கு வந்தார். தாயின் உடலை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் கதறி அழுதார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு பல தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்தனர்.

அண்மைச் செய்தி: 22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை – எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கூறுகையில், “ ஓபிஎஸ் தாயாரின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தாயை இழந்து வாரும் அண்ணன் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.