முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள் வணிகம்

24 நாட்களில் அதானியின் ரூ.12 லட்சம் கோடி அம்பேல்!


ரா.தங்கபாண்டியன்

கட்டுரையாளர்

அதானி குழுமத்தைப்பற்றி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான ஜனவரி 24 ஆம் தேதியிலிருந்து,கடந்த 24 நாட்களில் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடுமையாக சரிவடைந்து, 30 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. இனி என்ன ஆகும் அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

குஜராத்தை சேர்ந்த கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் பல விதமான முறைகேடுகளில் ஈடுபட்டு செயற்கையான முறையில் பங்குகளீன் மதிப்பை உயர்த்தியுள்ளது. அதானி குழுமம் பல விதமான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை கடந்த ஜனவரி மாதம், 24 ஆம் தேதி வெளியிட்ட பின்னர் அதானி குழும நிறுவனங்கள் பலத்த சரிவினைக் கண்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹிண்டன்பர்க் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் அதானி, இந்த குற்றசாட்டுகள் இந்திய நிறுவனத்தின் மீதான சர்வதேச தாக்குதல் என விளக்கமளித்தது. இந்திய ரிசர்வ் வங்கியும், எஸ்.பி.ஐ. , எல்.ஐ.சி என அனைத்து நிறுவனங்களும் இதனால்  ஆபத்து ஒன்றும் இல்லை. கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தத்து. ஆனால் பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி அமைப்பு மட்டும் விசாரணையில் களமிறங்கியுள்ளது.

குறிப்பாக இந்த சரிவில் சில்லறை முதலீட்டாளர்கள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பெரும்பாலான தர மதிப்பீட்டு நிறுவனங்கள் அதானி நிறுவனங்களுக்கு நெகட்டிவ் மதிப்பை வழங்கி வருகின்றன. அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிவடைந்ததால் பங்குச்சந்தைகளின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீட்டை நிர்ணயிக்கும் பட்டியலில் இருந்தும் அதானி நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதனையும் படியுங்கள் : டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் – கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா!

அதே போல்,அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் 100 பில்லியன் டாலர்கள் குறைந்து, ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில், 3 வது இடத்திலிருந்து, 25 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான, ஜனவரி 24 ஆம் தேதியில் இருந்து அதானி குழுமத்தினை சேர்ந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 12 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.

ஜனவரி மாதம் 24 ஆம் தேதியன்று அதானி எண்டர்பிரைசஸின் பங்கு ஒன்றின் விலை மூன்றாயிரத்து 442 ரூபாயாக இருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை வந்த 24 ஆம் நாளான பிப்ரவரி 17 ஆம் தேதி, வர்த்தக நேர நிறைவில் ஆயிரத்து 719 ரூபாயாக சரிந்துள்ளது.

அதே போல் அதானி டோட்டல் கேஸ் மூன்றாயிரத்து 891 ரூபாயிலிருந்து  971 ரூபாயாகவும், அதானி டிரான்ஸ்மிஷன் இரண்டாயிரத்து 762 ரூபாயிலிருந்து 920 ரூபாயாகவும், அதானி கிரீன் எனர்ஜி ஆயிரத்து 916 ரூபாயிலிருந்து  628 ரூபாயாகவும், அதானி வில்மர் 572 ரூபாயிலிருந்து 438 ரூபாயாகவும், அதானி பவர் 274 ரூபாயிலிருந்து  155 ரூபாயாகவும், அதானி போர்ட்ஸ் 761 ரூபாயிலிருந்து 577 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

அதானியின் என்.டி.டி.வி பங்குகள்  284 ரூபாயிலிருந்து  206 ரூபாயாக குறைந்துள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் 498 ரூபாயிலிருந்து  347 ரூபாயாக குறைந்துள்ளது. ஏசிசி லிமிடெட் 2335 ரூபாயிலிருந்து 1834 ரூபாயாக இருந்தது. 25 நாட்களில், அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.

ஆனாலும் அதானியை தூக்கி நிறுத்த இந்தியாவில் சில அமைப்புகளூம், அரபு நாட்டின் இன்டர்னேஷனல் ஹோல்டிங் என ஆதரவளிக்கும் கரங்களும் நீள்கின்றன. அதே சமயம் வங்கியில் வட்டி குறைவு என்பதால், வருங்காலத்தின் தேவையை நிறைவு செய்ய, பங்குச்சந்தை முதலீடு பலனளிக்கும் என்ற நம்பிக்கையில், அதானி போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள புதிய சில்லறை முதலீட்டாளர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது. எனவே  தலை மேல் கையை வைத்துக்கொண்டு புலம்புவதை தவிர வழி ஒன்றும் இல்லை. எளியவர்களின் குரல் என்றும் அம்பலம் ஏறாது.

ரா.தங்கபாண்டியன், நியூஸ்7 தமிழ்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாண்டஸ்: பாதுகாப்பு கருதி மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது – அமைச்சர்

EZHILARASAN D

மின் தட்டுப்பாட்டை தவிர்க்க அமைச்சர் நாளை ஆலோசனை

Web Editor

”எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது” – இயக்குநர் மிஷ்கின் குறித்து லோகேஷ் கனகராஜ்

Web Editor